டலகாசி தமிழ் சங்கம் (டதச) [English Version]

சங்க குறிக்கோள்: டலகாசி தமிழ் சங்கம் (டதச) பொ.யு. 2000 ல் தொடங்கப் பெற்றது சங்கத்தின் முதல் குறிக்கோள் தமிழ் மொழியை வளர்த்தவும் பரப்பவும் தேவையான வகையில் கலாச்சார விழாக்களை நடத்துவதும் என்பதே. வருடம் 2000-த்தை டலகாசி தமிழ் சங்கத்தின் ஆரம்பமாக கருதலாம். அந்த வருடம் திருமதி கற்பகம் மற்றும் திரு முத்துசுவாமி அவர்களும், பானுவும், நானும் டலகாசியில் வாழும் தமிழ் நண்பர்களையும் அவர்களின குடும்பத்தோரையும் அழைத்து ஒன்றாகக் கூட்டினோம். அன்று மாலையில் இந்தியா, மலேசியா, சிங்கபூர், மற்றும் இலங்கை தமிழ் நண்பர்கள் பலர் பங்கு கொண்டனர்.

2000‍ முதல் 2003 வரை எங்கள் கூட்டங்கள் பொதுவாக தமிழ் நண்பர்களையும் அவர்களின் குடும்பத்தோரையும் பார்த்து பேசுவதும், பழகுவதும், உணவு அருந்துவதுமாக இருந்த‌து. அப்போழ்து திருமதி உஷா சந்திரா மற்றும் திரு நமா சந்திரா அவர்களும் (கல்லூரி ஆசிரியர்கள்) டலகாசியில் வாழும் தமிழ் குழந்தைகளுக்கு தமிழ்ப் பாடம் சொல்லித் தர ஆசைப் பட்டார்கள். அதை அடுத்து வந்த தமிழ் வருடப்பிறபிறக்கு அனைவரும் தமிழ் நிகழ்ச்சிகள் செய்ய வேண்டும் என்று பிரியப்பட்டார்கள்.

கடந்த பல வருடங்களாக டலகாசி தமிழ்ச் சங்கத்தின் மூலமாக பல கலை நிகழ்ச்சிகள் நாங்கள் நடத்தி வந்துள்ளோம். இந்த நிகழ்ச்சிகளில் சிறுவர்கள், சிறுமிகள், மற்றும் பெரியவ‌ர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) பங்கு கொண்டு இருக்கிறார்கள். தமிழ் கற்று கொண்ட சிறுவர்களும் மற்றும் சிறுமிகளும் டலகாசி இந்திய சங்கத்தின் (India Association of Tallahassee's | IATLH) Glimpses of India நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார்கள்.

இதுவரை தமிழ் கற்று கொண்ட டலகாசி சிறுவர்களும் மற்றும் சிறுமிகளும் ஆத்திசூடி, தமிழில் கதை சொல்லுதல், மகா கவி பாரதியாரின் "ஒளி படைத்த கண்ணி நாய் வா! வா!" பாட்டு, "போலிக்கு தண்டனை" நாடகம், "தெனாலி இராமன்" நாடகம், மற்றும் பல நிகழ்ச்சிகளில் பங்கெற்றனர்.

கடந்த சில வருடங்களாக (2007 முதல்) தமிழ் விழாவில் பங்கு கொள்ளுவர்களின் எண்ணிக்கை அதிரிக்கவே இப்போது தமிழ் விழாவைப் பொது இடத்தில் நடத்தி வருகிறோம். 2009 ல் தொடங்கி கோலப் போட்டியும், குடும்ப சுற்றுலாவையும் ஆரம்பித்து நடத்தி வருகிறோம். திருமதி மணிபிரியாவும் திரு மனோகரனும் இதை முன் வந்து நடத்த உதவி செய்கிறார்கள். 2010 ல் நகைச் சுவை வசனமும் மற்றவர் போல பேசி நடிப்பதும் சேர்க்கப் பட்டன. 2011 ல் நகைச்சுவை நாடகங்கள் இரண்டை நடத்தினோம்.

மேலும் விஷயம்

The webpage design & contents © 2009-12 Thayumanasamy Somasundaram.