டலகாசி தமிழ் சங்கம் (டதச) [English Version]

சங்க குறிக்கோள்: டலகாசி தமிழ் சங்கம் (டதச) பொ.யு. 2000 ல் தொடங்கப் பெற்றது சங்கத்தின் முதல் குறிக்கோள் தமிழ் மொழியை வளர்த்தவும் பரப்பவும் தேவையான வகையில் கலாச்சார விழாக்களை நடத்துவதும் என்பதே. வருடம் 2000-த்தை டலகாசி தமிழ் சங்கத்தின் ஆரம்பமாக கருதலாம். கடந்த பல வருடங்களாக டலகாசி தமிழ்ச் சங்கத்தின் மூலமாக பல கலை நிகழ்ச்சிகள் நாங்கள் நடத்தி வந்துள்ளோம். இந்த நிகழ்ச்சிகளில் சிறுவர்கள், சிறுமிகள், மற்றும் பெரியவ‌ர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) பங்கு கொண்டு இருக்கிறார்கள். தமிழ் கற்று கொண்ட சிறுவர்களும் மற்றும் சிறுமிகளும் டலகாசி இந்திய சங்கத்தின் (India Association of Tallahassee's | IATLH) Glimpses of India நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார்கள். 2007 முதல் தமிழ் விழாவில் பங்கு கொள்ளுவர்களின் எண்ணிக்கை அதிரிக்கவே தமிழ் விழாவைப் பொது இடத்தில் நடத்தி வருகிறோம். 2009 ல் தொடங்கி கோலப் போட்டியும், குடும்ப சுற்றுலாவையும் ஆரம்பித்து நடத்தி வருகிறோம். 2010 ல் நகைச் சுவை வசனமும் மற்றவர் போல பேசி நடிப்பதும் சேர்க்கப் பட்டன. 2011 ல் நகைச்சுவை நாடகங்கள் இரண்டை நடத்தினோம்.

தமிழ் பாடங்கள்

2012 ல் நான் தமிழ் பாடங்களை இந்த தளத்தில் போட ஆரமித்துள்ளேன்.

தமிழ் பாடப் பயிற்சி

தமிழ் பாடப் பயிற்சி .pdf format -ல் இந்த இணைத்தில் சேர்த்து இருக்கிறேன் . PowerPoint format -ல் தான் இந்த பயிற்சி சரியாக வேலை செய்யும். PowerPoint format தேவைப் படுவோர் என்னை நேராக தொடர்பு கொள்ளவும்.

தமிழ் மொழி உதவி

The webpage design & contents © 2009-15 Thayumanasamy Somasundaram.